தமிழகம்

மத்திய அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை

செய்திப்பிரிவு

அம்பேத்கர் பிறந்த நாளை (செவ்வாய்க்கிழமை) முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு ஊழியர்கள் நல ஒருங்கிணைப்பு குழு வெளியிட்ட செய்தி குறிப்பில், "அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நாளை (ஏப்ரல் 14, 2015 -செவ்வாய்கிழமை) மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பணியாளர்கள் நலன், பொது மக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் பணியாளர் மற்றும் பயிற்சி துறை இதை அறிவித்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT