சிஐடியு தொழிற் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சத்துணவுத் திட்டத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் ஊதியம் அரசு துறைகளில் கடைநிலை ஊழியர் பெறும் ஊதியத்தை விட குறைவாகும். அதிமுக ஆட்சியில் இவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் தற்போது காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டிய நிர்பந்தத்தை அரசே உருவாக்குகிறது. தொழிலாளர்களின் போராட்டத்தை அச்சுறுத்தல் மூலம் அடக்க முயல்வதை கைவிட்டு போராட்டத்தில் ஈடுபடும் சங்கத்தை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.