தஞ்சை பெரிய கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற் றம் நேற்று காலை சிறப்பாக நடைபெற்றது.
கோயில் தேரோட்டம் நூற் றாண்டுகளுக்குப் பிறகு ஏப்.29-ல் நடைபெற உள்ளது.
தஞ்சை பெரிய கோயில் எனப்படும் பெருவுடையார் கோயி லில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைப் பெருவிழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கொடிமரத் துக்கு பால், மஞ்சள், பஞ்சா மிர்தம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி ஆகிய 4 ராஜ வீதிகளில் கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது.
விழாவில், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜாபான்ஸ்லே, உதவி ஆணையர் க.ரமணி, செயல் அலுவலர் தா.அரவிந்தன், கண்காணிப்பாளர் ஆ.ரவிச் சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவையொட்டி, நாள் தோறும் இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா வும், கோயில் வளாகத்தில் பாரம்பரிய சின்ன மேளம் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.