தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்திறன் பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்களை ஐசிடி அகாடமி ஆப் இந்தியா வரவேற்கிறது.
இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக ஐடிஐ-க்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகவல் தொழில்நுட்ப பயிற்சியாளர் மற்றும் மென்திறன் பயிற்சியாளர் பணியிடங் களுக்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு ஐசிடி அகாடமி வரவேற்கிறது. இந்த ஒப்பந்தத்தை ஓராண்டு காலத்துக்குப் பிறகு புதுப்பித்துக் கொள்ளலாம்.
எம்.பி.ஏ., பி.பி.ஏ. கல்வித் தகுதியோடு குறைந்தது 2 ஆண்டு பணி அனுபவமும், அடிப்படை தகவல் தொழில்நுட்பத் திறன், பேச்சுத் திறன், பிரசன்டேசன் திறன் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விருப்பமுள்ள மற்றும் தகுதியுடைய நபர்கள் பணிபுரிய விரும்பும் இடத்தைக் குறிப்பிட்டு தங்களின் சமீபத்திய பாஸ் போர்ட் அளவு புகைப்படத்துடன் தங்கள் சுய விவர அறிக்கையை rishi@ictact.in என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பலாம் அல்லது ஐ.சி.டி அகாடமி, எல்காட் காம்பிளக்ஸ், 2-7, தொழிற்பேட்டை, பெருங்குடி, சென்னை-96 என்ற முகவ ரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு >www.ictact.in/ititrainer என்ற இணையதளத்தை அணுகவும். தொலை பேசி எண் 044-42906800. விண்ணப் பங்களை வரும் 15-ம் தேதிக்குள் சமர்ப் பிக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.