தமிழனிடம் இருந்து அவனது மொழியை பிடுங்கிவிட்டனர் என்று இயக்குநர் தங்கர் பச்சான் கவலை தெரிவித்தார்.
சிதம்பரத்தில் தமிழ் தேசியப் பேரியக்கம் சார்பாக மேகேதாட்டு அணை, மீத்தேன், கெய்ல், நியுட்ரினோ அணுஉலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்த் தேசிய சூழலியல் மாநாடு நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், மீத்தேன் திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் செயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் இயக்குநர் தங்கர்பச்சான் பேசியதாவது:
பேஸ்புக்கில் மூழ்கி பேசவே தெரியாமல் தமிழன் முழிக்கிறான். அவனிடம் இருந்து மொழியை பிடுங்கிவிட்டார்கள்.
அவர்களை நம் இனத்தைப் பற்றி உணர வையுங்கள். ஓட்டு போட்டுவிட்டு அரசியல்வாதிக்கு அடிமையாக இருக்கிறீர்கள். விடு தலை சாவியை அவர்களிடமே கொடுத்து விடுகிறீர்கள். அரசியல் வாதிகளுக்கு அடிமையாக இருந்துகொண்டு ஈழத் தமிழனுக் காக எப்படி போராட முடியும்? 1 லட்சம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சவை நாம் திட்டுகிறோம். ஆனால், அதுபோல பல மடங்கு இங்கு தினமும் செத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
தூய்மை தூய்மை என பேசுகின்றனர். எங்கு இருக்கிறது தூய்மை? எங்கள் ஊரில் 820 அடி தோண்டினால்தான் தண்ணீர் வரு கிறது. எங்கும் மாசு படிந்து புற்று நோய் வருகிறது. காற்று, நீர் மாசு பட்டுவிட்டன. மக்கள் போராட்டம் நடைபெற்றால்தான் அனைத்துக் கும் விடிவு காலம் பிறக்கும். மது பானக் கடைகள் முன்பு பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்த வேண்டும். அப்போதுதான் குடியை ஒழிக்க முடியும்.
மக்கள் சிந்திக்க மறந்துவிட் டார்கள். தமிழர்களின் பாரம்பரிய அடையாளம் காணாமல் போய்விட்டன. நாடாளுமன்றத்தில் குற்றப் பின்னணி உள்ள எம்பிக்களால் என்ன நன்மை தரும் சட்டங்கள் நிறைவேறப் போகிறது? இவ்வாறு தங்கர் பச்சான் பேசினார்.