தமிழகம்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு செப்டம்பருக்கு தள்ளிவைப்பு: வெளிநாட்டினர் கேட்டதால் முடிவு

செய்திப்பிரிவு

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கேட்டுக்கொண்டதை அடுத்து சென்னையில் மே மாதம் நடக்க இருந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு செப்டம்பர் மாதத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழக அரசு சார்பில் மே 23, 24 தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனியில் தமிழக தொழில் துறை சார்பில் கண்காட்சிகள் (ரோடு ஷோ) நடத்தப்பட்டன.

நம் நாட்டில் பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, அகமதா பாத், கோவையில் உள்ளூர் கண்காட்சிகள் நடத்தப்பட்டன. அடுத்ததாக சீனா, தைவான் நாடுகளிலும், இந்தியாவில் புனே, மும்பை, கொல்கத்தாவிலும், தமிழகத்தில் சேலம், மதுரை, தூத்துக்குடியிலும் இது போன்ற கண்காட்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, எரிசக்தி துறையில் ரூ.23 ஆயிரம் கோடி, இதர துறைகளில் ரூ.53 ஆயிரம் கோடி என ரூ.76 ஆயிரம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகி றது. வெளிநாடுகளில் நடத்தப் பட்ட கண்காட்சிகளில் மாநிலத் தின் தொழிற்சாலை முதலீட்டு சூழலை அறிந்து, பலரும் தமிழகத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அதிக முதலீடு செய்ய உறுதி

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலர் அதிக அளவு முதலீடு செய்வதாக உறுதியளித்ததுடன் அவற்றை இறுதி செய்ய கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளனர். கோடை காலம் முடிந்த பிறகு, முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துமாறு பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

பல முதலீட்டாளர்கள் ஏற்கெனவே தங்களது முதலீட்டை இறுதி செய்துவிட்ட நிலையில், அவர்களுக்கு அனுமதி அளிப் பதற்கான அரசாணை வெளி யிடுவது, அவர்களுடன் புரிந்து ணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வது ஆகிய பணிகளும் மாநாட்டில் நடக்க உள்ளன.

இவற்றை கருத்தில் கொண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் செப்டம்பர் 9, 10 தேதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT