தமிழகம்

இரைப்பை, குடல் சிகிச்சை 2 நாள் கருத்தரங்கம்

செய்திப்பிரிவு

சென்னை மருத்துவக் கல்லூரி - ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை இரைப்பை, குடல் அறுவை சிகிச்சைத் துறை மற்றும் இரைப்பை, குடல் மருத்துவப் பிரிவு இணைந்து டாக்டர்களுக்கான தொடர் கல்வி கருத்தரங்கம் ஒன்றை வரும் 18, 19 ஆகிய தேதியில் நடத் துகிறது.

இந்த கருத்தரங்கில் அமெரிக்கா, ஸ்பெயின், தென் கொரியா, ஹாங்காங் நாடுகளின் முன்னணி பல்கலைக்கழகங் களைச் சேர்ந்தவர்கள் மற்றும் அகில இந்திய அளவில் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.

இரைப்பை, உணவுக் குழாயில் சிறந்த முறையில் பாதுகாப்பாக அறுவை சிகிச்சை மற்றும் எண்டோஸ்கோப்பி செய்வது எப்படி என்பது குறித்து வளரும் டாக்டர்களுக்கு நிபுணர்கள் அறிவுரை வழங்க உள்ளனர். இத்துறையில் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் டாக்டர்களுக்கு கருத்தரங்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதில் பங்கேற்க www.ghgastro.in மற்றும் www.esoindia.org ஆகிய இணையதளங்களில் பதிவு செய்துகொள்ளலாம்.

SCROLL FOR NEXT