தமிழகம்

ஆசிக் மீரா மீது ஈவ்டீஸிங் புகார்

செய்திப்பிரிவு

திருச்சி நீதிமன்றத்துக்கு நேற்று விசாரணைக்கு வந்த துர்கேஸ் வரியை கேலி செய்ததாக அளித்த புகாரின்பேரில் போலீஸார், ஆசிக் மீரா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா(30). இவர் மீது சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த துர்கேஸ்வரி(29) என்பவர், திருமணம் செய்வதாகக் கூறி ஆசிக் மீரா தன்னை பலாத்காரம் செய்ததாகவும், தனக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும், தற்போது திருமணம் செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் திருச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றுவருகிறது.

இதனிடையே தனது குழந்தைக்கு ஜீவனாம்சம் கேட்டு திருச்சி குடும்ப நல நீதிமன்றத்தில் துர்கேஸ்வரி கடந்த ஜனவரி மாதம் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்காக ஆசிக் மீரா, துர்கேஸ்வரி ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.

அப்போது, நீதிமன்ற படிக்கட்டில் நடந்துவந்த துர்கேஸ்வரியைப் பார்த்து, உன்னுடன் யாரும் வரவில்லையா அல்லது உடன் வருபவர்களுக்குக் கொடுக்கப் பணமில்லையா என்றும், வேறு சில தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தியும் கேலியாக ஆசிக் மீரா பேசியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து துர்கேஸ்வரி, நீதிமன்ற வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஆசிக் மீரா மீது ஈவ் டீசிங் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக துர்கேஸ்வரி யிடம் கேட்டபோது, “நீதிமன்ற விசா ரணைக்கு வந்த ஆசிக் மீரா கிண் டல் செய்ததுடன், தரக்குறைவாகப் பேசினார். அப்போது அவருடன் இருந்த அவரது நண்பர் அருணா சலம் உள்ளிட்ட சிலர் என்னைப் பார்த்து கிண்டலாகச் சிரித்தனர். இதனால் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்” என்றார்.

SCROLL FOR NEXT