தமிழகம்

தமிழக மீனவர்களின் கோரிக்கை இலங்கை அதிபர் நிராகரிப்பு: இலங்கை கடலில் மீன்பிடிக்க அனுமதியில்லை

செய்திப்பிரிவு

இலங்கை கடல் பகுதியில் ஆண்டுக்கு 83 நாள் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் விடுத்த கோரிக்கையை இலங்கை அதிபர் சிறிசேனா நேற்று நிராகரித்தார்.

தமிழக, இலங்கை மீனவர்களி டையே மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை சென்னையில் கடந்த மாதம் 24-ம் தேதி நடை பெற்றது. அப்போது ஆண்டுக்கு 83 நாள் இலங்கை கடல் பகுதி யில் மீன் பிடிக்கும் உரிமை, இரட்டைமடி, சுருக்குமடி வலை களை பயன்படுத்த அனுமதி உட்பட 7 அம்ச கோரிக்கைகளை தமிழக மீனவர்கள் வலியுறுத்தினர்.

இக்கோரிக்கைகள் குறித்து மே மாதம் முடிவை அறிவிப்பதாக இலங்கை மீனவர்கள் தெரி வித்தனர்.

இந்நிலையில், இரு நாட்டு மீனவர்களின் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் கொழும்பில் நேற்று நடைபெற்றது.

இதில் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், மன்னார், யாழ்ப்பாணம் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய வடமாகாண மாவட்டங்களின் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்துக்குப் பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட கடல் தொழிலாளர்களின் சம்மேள னத் தலைவர் அந்தோணி எமிலியாம்பிள்ளை செய்தியாளர் களிடம் கூறியதாவது:

இலங்கை கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்படமாட்டாது. தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிக்க நுழைந்தால் அவர்களை படகுகளுடன் கைது செய்ய அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார் எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT