தமிழகம்

மே மாத முதல் வாரத்தில் நடக்கவிருந்த குரூப்-1 மெயின் தேர்வு ஜூன் மாதத்துக்கு தள்ளிவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

செய்திப்பிரிவு

மே மாத முதல் வாரத்தில் நடைபெறுவதாக இருந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மெயின் தேர்வு ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் பதவிகளில் 79 காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவு கடந்த ஜனவரி 30-ம் தேதி வெளியானது. அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு ஏறத்தாழ 4,000 பேர் தகுதிபெற்றனர்.

டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே வெளியிட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையின்படி, குரூப்-1 மெயின் தேர்வு மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் நடத்தப்பட வேண்டும். தேர்வு நாள் நெருங்கிவிட்ட நிலையில், முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெற்றவர் களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) வழங்கப்படவில்லை.

தேர்வர்கள் குழப்பம்

எனவே, குரூப்-1 மெயின் தேர்வு மே முதல் வாரத்தில் நடத்தப்படுமா? அல்லது தள்ளிவைக்கப்படுமா என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு எதுவும் வெளியிடாமல் இருந்து வந்தது. இதனால், மெயின் தேர்வுக்குப் படித்து வரும் தேர்வர்கள் குழப்பம் அடைந் தனர்.

அதிகாரி தகவல்

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘குரூப்-1 முதன்மை தேர்வு மே மாதம் 2,3,4 தேதிகளில் சென்னை தேர்வு மையத்தில் நடப்பதாக இருந்தது. இந்த தேர்வு வரும் ஜூன் மாதம் 5,6,7 தேதிகளில் சென்னை தேர்வு மையத்தில் நடத்தப்படும்’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT