'ரயில் கொள்ளையர்களைக் கண்டு பிடிக்க சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 உட்கோட்டங்களில் ரயில்வே காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் தலைமை யில் 14 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளது’ என ரயில்வே காவல் துறை ஐ.ஜி. சீமா அகர்வால் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காருவள்ளியில் கடந்த 26-ம் தேதி பெங்களூரு நோக்கிச் சென்ற ரயிலில் 4 பெண்களிடம் 17 சவரன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர்.
கடந்த 3-ம் தேதி அதிகாலை சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மாவுலிபாளையத்தில் புளுமவுண்டன் எக்ஸ்பிரஸ் ரயிலில் கத்தி முனையில் பெண் களை மிரட்டி 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. ஓடும் ரயிலில் நடைபெறும் தொடர் கொள் ளைச் சம்பவத்தால் ரயில் பயணி கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சேலத்தில் ரயில்வே காவல் துறை ஐ.ஜி. சீமா அகர்வால், காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியது:
சேலம் மாவட்டத்தில் ரயில்களில் தொடர் கொள்ளை சம்பவம் நடை பெற்று வருகிறது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் ரயில்களில் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் தொடர் கண்காணிப்பு பணி மேற் கொள்ளப்பட்டு வருகிறது. ரயில் கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 உட் கோட்டங்களில் உள்ள ரயில்வே காவல்துறை துணை கண்காணிப் பாளர்கள் தலைமையில் 14 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுக்களுக்கு கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜவேல் தலைமை வகிக்கிறார். ரயில்வே காவல் துறையினருடன் உள்ளூர் போலீஸாரும் இணைந்து இரவு நேர தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில் கொள்ளை குறித்து எவ்வித துப்பும் இதுவரை கிடைக்கவில்லை. கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து பல்வேறு பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்படும்.
ரயில் நிலையங்களில் செயல் படாத நிலையில் உள்ள கேமராக் களை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறையினர் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ரயில் பயணத்தின்போது பயணி கள் யாரும் அச்சப்படத் தேவை யில்லை. ரயில்களில் சந்தேகப் படும்படி நபர்கள் இருந்தால், காவலர் அல்லது உதவி மையத்துக்கு தகவல் அளிக்கலாம்.
இவ்வாறு ஐ.ஜி. சீமா அகர்வால் கூறினார்.