தமிழகம்

தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை கோரி பாமக வழக்கு

செய்திப்பிரிவு

பாமக சார்பில் ஆந்திராவுக்கு உண்மை அறியும் குழு சென்றுள்ளது. இதன் அறிக்கையை டெல்லி தேசிய மனித உரிமை ஆணையத்திடம் தெரிவிப்போம். இதன் மூலம் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

சேலத்தில் பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆந்திர மாநிலத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழகத் தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். அவர் களின் குடும்பத்தினருக்கு வீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும். தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி சிபிஐ விசாரணை நடத்த கோரவேண்டும்.

ஆந்திர சிறையில் உள்ள 3,000 தமிழர்களை விடுவித்து, மறுவாழ்வு ஏற்படுத்தி தரவேண் டும். திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட் டங்களில் தொழில் வளம் இல்லாத தால், வெளி மாநிலங்களுக்கு தொழிலாளர்கள் செல்கின்றனர். இந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு மற்றும் சுயதொழில் ஏற்படுத்த வேண்டும்.

பாமக சார்பில் ஆந்திர மாநிலத் துக்கு உண்மை அறியும் குழு சென்றுள்ளது. இக்குழுவின் அறிக்கை டெல்லி தேசிய மனித உரிமை ஆணையத்திடம் வழங்கப் படும். இதையடுத்து சிபிஐ விசாரணை நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். மத்தியில் உள்ள மோடி அரசுக்கு 5 ஆண்டுகள் ஆதரவு தருவதாக உறுதி தந்துள்ளோம். மாநிலத்தில் பாஜக எங்களோடு சேரலாம். இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT