தமிழகம்

விஜயகாந்தை எதிர்க்கட்சி தலைவராக ஏற்க முடியாது: சீமான்

செய்திப்பிரிவு

`விஜயகாந்தை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்க முடியாது’ என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

கங்கைகொண்டான் சிப்காட்டில் செயல்படும் தனியார் குளிர்பான ஆலைக்கு தாமிர வருணியிலிருந்து தண்ணீர் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, பாளையங்கோட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்றது. கட்சியின் தென்மண்டல அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் ச.சிவக்குமார் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் ராம்குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் முன்னிலை வகித்தனர். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்புரையாற்றினார்.

முன்னதாக செய்தியாளர் களிடம் அவர் கூறும்போது, “திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வெளிநாட்டு குளிர்பான ஆலைகளை மூடும்வரை எங்கள் போராட்டம் தொடரும். சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலை யானால் மகிழ்ச்சி அடைவேன். விஜயகாந்தை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்க முடியாது. 20 தமிழர்கள் கொலை செய்யப்பட்டபோது அவர் ஏன் அனைத்து கட்சி தலைவர்களுடன் சென்று பிரதமரை சந்திக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

உண்ணாவிரதத்தில் மாநகர இணைச் செயலாளர் ச.ஆ.நயினார், தாமிரபரணி பாசன உரிமை பாதுகாப்புப் பேரவை தலைவர் வியனரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT