புகையிலைப் பொருட்கள் மீது 85 சதவீத அளவில் எச்சரிக்கை விளம்பரங்களை வெளியிட வகை செய்யும் புகையிலை கட்டுப்பாடு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு உடனே அமல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சிகரெட், பீடி உள்ளிட்ட புகையி லைப் பொருள் பாக்கெட்கள் மீது 85 சதவீத அளவில் எச்சரிக்கை விளம் பரங்களை வெளியிட வலியுறுத்தி பசுமைத் தாயகம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:
பல போராட்டங்கள் நடத்தியுள் ளேன். ஆனால், மது, புகையிலைக்கு எதிராக போராட்டம் நடத்துவதுதான் மகிழ்ச்சி அளிக்கிறது. மதுவும், புகையிலையும் இளைஞர்களை சீரழிக்கிறது, கொல்கிறது. புகையிலை பாதிப்புகளால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இறக்கின்றனர்.
கடந்த 2004-ல் மத்திய சுகாதார அமைச்சராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்ற பிறகு, பொது இடங்களில் புகையிலைப் பொருட்களை பயன்படுத்த தடைச் சட்டம் கொண்டுவந்தார். அதற்கு 150 எம்.பி.க்கள், தமிழக முதல்வர் உட்பட 5 மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி அந்த சட்டத்தை அன்புமணி கொண்டுவந்தார்.
சினிமாக்களில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவதை எதிர்த் தோம். ஆனால், அதற்கு ஊடகங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. எங்களது நல்ல நோக்கத்தை அறிந்து சில நாட்களுக்குள் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்கமாட்டோம் என வெளிப்படையாக அறிவித்தனர்.
இந்நிலையில், சிகரெட், பீடி பாக்கெட்கள் மீது 85 சதவீத அள வில் எச்சரிக்கைப் படங்களை வெளியிடும் திட்டத்தை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது. மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் புகையிலை நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல் படுவது கண்டிக்கத்தக்கது. இந்த விஷயத்தில் நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக் கள் முட்டாள்தனத்தைவிட மோச மானவை.
புகையிலை கட்டுப்பாடு திருத்த சட்ட மசோதா 2015-ஐ மத்திய அரசு உடனே அமல்படுத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி இவ்விஷயத் தில் உடனடியாக தலையிட்டு இச் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தேவை ஏற்பட்டால் இப்பிரச்சினையை வலியுறுத்தி மாதம் ஒரு போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
ஆந்திரம் செல்லும் பாமக குழு
செய்தியாளர்களிடம் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறும்போது, ‘‘புகையிலைப் பொருட்கள் வாங்குவதற்கான வயது வரம்பை 18-ல் இருந்து 21 ஆக அதிகரிப்பது, பொது இடங்களில் புகைபிடித்தால் ரூ.1 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிப் பது ஆகிய பரிந்துரைகள் புகையிலை கட்டுப்பாடு சட்டத் திருத்த மசோதா வில் கூறப்பட்டுள்ளது. அவற்றை உடனே அமல்படுத்த வேண்டும்.
ஆந்திரத்தில் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க பாமக சார்பில் அமைக் கப்பட்டுள்ள உண்மை கண்டறியும் குழு சனிக்கிழமை (இன்று) ஆந்திரம் செல்கிறது’’ என்றார்.
புகையிலை கட்டுப்பாடு திருத்த சட்ட மசோதா 2015-ஐ மத்திய அரசு உடனே அமல்படுத்த வேண்டும் மற்றும் சிகரெட், பீடி உள்ளிட்ட புகையிலைப் பொருள் பாக்கெட்கள் மீது 85 சதவீத அளவில் எச்சரிக்கை விளம்பரங்களை வெளியிட வலியுறுத்தி பசுமைத் தாயகம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவரும் முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.