தமிழகம்

முதல்வர் பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை கோரி ஆளுநரிடம் பாமக மனு

செய்திப்பிரிவு

அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காத முதலமைச்சர் பன்னீர்செல்வம் மீது 356-ஆவது பிரிவின்படி நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுநர் ரோசய்யாவுக்கு பாமக சார்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாமக அனுப்பியுள்ள பத்திரிகை குறிப்பில், "தமிழக சட்டப்பேரவையில் கடந்த 25.03.2015 அன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அலுவல் ரீதியாக வெளிப்படையாக சில கருத்துக்களை தெரிவித்ததன் மூலம், அரசியலமைப்புச் சட்ட விதிகளை மீறியுள்ளார். அவரது செயல்பாடுகளால் தமிழகத்தில் அரசியலமைப்பு சட்ட செயல்பாடுகள் தோல்வியடைந்து விட்டன.

இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக ஆளுநருக்கு பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி மனு அனுப்பியுள்ளார்.

இந்த மனுவின் நகல் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கும் அனுப்பப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT