தமிழகம்

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் நாசம்: கிடங்கு வசதி ஏற்படுத்தப்படுமா?

செய்திப்பிரிவு

ரேஷன் கடைகளுக்கு அரிசி விநியோகிப்பதற்காக திருவா ரூரிலிருந்து ரயில் மூலம் செங்கல் பட்டுக்கு கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகள் உரிய பாதுகாப்பின்றி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் திறந்தவெளியிலேயே அடுக்கி வைக்கப்பட்டதால், நேற்று பெய்த மழையில் முற்றிலும் நனைந்து நாசமாயின.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி விநியோகிப்பதற்காக திருவாரூர் மாவட்டத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் 1,800 டன் நெல் மூட்டைகள் நேற்று முன்தினம் செங்கல்பட்டு ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு, நெல் மூட்டை கள் அனைத்தும் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் திறந்தவெளியி லேயே அடுக்கிவைக்கப்பட்டன.

தொடர்ந்து, அங்கிருந்து திம்மாவரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் அரவை நிலையத்துக்கு லாரிகள் மூலம் நெல் மூட்டைகளை கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்றன. ஆனாலும், சுமார் 100 டன் நெல் மூட்டைகள் ரயில் நிலைய பிளாட்பாரத்திலேயே தேங்கிக் கிடந்தன.

இந்த நிலையில், நேற்று காலை செங்கல்பட்டில் மழை பெய்ததால், ரயில்வே பிளாட்பாரத்தில் தேங்கிக் கிடந்த நெல் மூட்டைகள் நனைந்து நாசமாயின. தகவலறிந்து விரைந்து வந்த நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர், அவசர அவசரமாக தார்ப்பாய்களைக் கொண்டு நெல் மூட்டைகளை மூடினர்.

இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறியதாவது:

இங்கு நெல் மூட்டைகள் மழையில் நனைவது புதிதல்ல. கடந்த டிசம்பர் மாதம் இதேபோல 80 டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாயின. செங்கல் பட்டு ரயில் நிலையத்தில் நெல் மூட்டைகளை இறக்கிவைக்க கிடங்கு இல்லாததே இதற்குக் காரணம். எனவே, ரயில்வே துறை யிடம் ஆலோசித்து கிடங்கு அமைக்க உரிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண் டும் என்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக வட்டாரங் கள் கூறியதாவது:

மழையில் நனைந்த நெல் மூட் டைகள் தனியாக பிரித்து வைக்கப் பட்டுள்ளன. மற்ற நெல் மூட்டை களை அங்கிருந்து உடனடியாக அரவை நிலையத்துக்கு கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கிடங்கு வசதி ஏற்படுத்துவது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்படும் என்றனர்.

SCROLL FOR NEXT