தமிழகம்

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: சேலத்தில் கல்லூரி விரிவுரையாளர் கைது

செய்திப்பிரிவு

சேலத்தில், மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கல்லூரி விரிவுரையாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து போலீஸார் கூறும்போது, "சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் பொறியியற் கல்லூரி மாணவிக்கு அதே கல்லூரியை சேர்ந்த விரிவுரையாளர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

பாடத்தில் சந்தேகம் கேட்ட மாணவியை (வயது 17) வீட்டுக்கு வந்து சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். மாணவியும், விரிவுரையாளரின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அங்கு அவரை பாலியல் துன்புறுத்தலுக்கு விரிவுரையாளர் ஆளாக்கியுள்ளார். சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளோம். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றனர்.

SCROLL FOR NEXT