மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து நாடுமுழுவதும் 11 மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் மாநிலங்களில் உள்ள 45 தொழிற்சங்கங்களும் நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதில், பேருந்து, லாரி, ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இதனால், தமிழகத்தில் போக்குவரத்து சேவை பாதிக்குமா? என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து நாளை பேருந்து ஓட்டுநர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதனால், தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து சேவை பாதிக்காது. மக்களுக்கு தேவையான அளவுக்கு பேருந்துகளை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென போக்குவரத்து மண்டலம் மற்றும் கிளை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளோம்.
அதன்படி, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பேருந்துகளை இயக்க போதிய அளவில் தொழிலாளர்களும் உள்ளனர்.’’என்றனர்.