அரசு தலைமை மருத்துவமனை யில் புதிதாக தொடங்கப்பட்ட இயற்கை முறை சிகிச்சை பிரி வுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதற்கென தனி கட்டிடம் கட்டும் பணி மே மாதம் நிறைவடைகிறது.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், பல்வேறு சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு கடந்த நவம் பர் மாதம் இயற்கை முறை சிகிச்சை பிரிவு தொடங் கப்பட்டது. இதில் ஒரு வாழ்வி யல் மருத்துவர், 2 யோக பயிற்சி யாளர் 1 உதவியாளர் நியமிக்கப் பட்டுள்ளனர். உணவே மருந்து என்ற அடிப்படையில் நோயாளி களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் அளிக்கப்படு கிறது. இந்த சிகிச்சை முறைக்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ள தால் கடந்த 5 மாதங்களில் மட்டும் 3,122 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதிக வரவேற்பையடுத்து குளியலறை யுடன் நவீன சிகிச்சை அரங்கத்துடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இயற்கை சிகிச்சை முறை குறித்து வாழ்வியல் மருத்துவர் திலகம் கூறியதாவது: இயற்கை முறையில் மண் சிகிச்சை, நீர் சிகிச்சை, காந்த சிகிச்சை மற்றும் இயற்கை முறை குளியல்கள், மசாஜ் போன்ற சிகிச்சைகளை அளிக்கின்றோம். மண் சிகிச்சை என்பது மூலிகை மண்ணை கொண்டு வழங்கப்படுவது. சூரிய குளியலைதான் நீர் சிகிச்சை என்கிறோம். ஆனால், இங்கு அளிக்கப்படுவது முற்றிலும் மாறுபட்டது. இங்கு வரும் நோயாளிகளுக்கு எந்த மாதிரி யான நோய் என்பதை கண்டறிந்து மசாஜ் போன்றவற்றால் தானா கவே சீரடைகிறது.
மன அழுத்தத்தினால் தற் கொலைக்கு முயற்சித்தவர்களை மீட்டு யோக பயிற்சியுடன் கவுன் சிலிங் அளிப்பதால் இந்த சிகிச்சைக்கு வரவேற்பு கிடைத் துள்ளது என்றார்.
மருத்துவமனை கண்காணிப் பாளர் சசிகலா கூறும்போது, ‘உள்சிகிச்சை பிரிவுக்காக ரூ.1.13 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில், இயற்கை சிகிச்சை பிரிவுக்கான அரங்குகள், யோக மையம், குளியல் அறைகள் அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் பணிகள், வரும் மே மாதத்துக்குள் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வரும்’ என்றார்.