தமிழகம்

தாம்பரத்தில் இன்றுமுதல் அஞ்சலக ஏடிஎம்

செய்திப்பிரிவு

தாம்பரம் தலைமை அஞ்சல கத்தில் இன்று முதல் ஏடிஎம் சேவை தொடங்கப்பட உள்ளது.

இந்திய அஞ்சல்துறையின் தகவல் தொழில்நுட்ப நவீன மயமாக்கல் திட்டத்தின்படி முக்கிய அஞ்சலகங்களில் அஞ்சலக ஏடிஎம் மையங்களை திறக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதன்படி நாட் டின் முதல் அஞ்சலக ஏடிஎம் சென்னை தியாகராய நகரில் திறக்கப்பட்டது.

இதையடுத்து சில நாட் களுக்கு முன்பு சென்னை பரங்கிமலை மற்றும் மயி லாப்பூர் தலைமை அஞ்சல கங்களிலும், கடந்த சனிக் கிழமை சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகத் திலும் அஞ்சலக ஏடிஎம் திறக்கப்பட்டது.

தாம்பரம் அஞ்சலகத்திலும் அன்றைய தினம் திறக்கப் படுவதாக இருந்த அஞ்சலக ஏடிஎம் மின்சார பிரச்சினை காரணமாக திறக்கப்படவில்லை. இந்நிலையில் தாம்பரம் தலைமை அஞ்சலகத்தில் அஞ்சலக ஏடிஎம் மையம் இன்று திறக்கப்படவுள்ளது. சிபிஎஸ் எனப்படும் திட்டத்தின் கீழ் கணக்கு வைத்துள்ளவர்கள் இந்த மையங்களை பயன்படுத் திக் கொள்ள முடியும் என்று அஞ்சல் துறை அதிகாரிகள் கூறினர். இந்த வசதி தாம்பரம் பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

SCROLL FOR NEXT