தமிழகம்

உலகம் போற்றும் கிராமப்புற சுகாதாரத் திட்டம்: பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி பெருமிதம்

செய்திப்பிரிவு

2005-ல் இந்தியாவில் தொடங்கப் பட்ட கிராமப்புற சுகாதாரத் திட்டம், உலகின் மாபெரும் சுகாதாரத் திட்டமாகப் போற்றப்படுகிறது என்று பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை விவரம்:

இந்திய சுகாதார வரலாற்றில் 12-04-2005 மிக முக்கியமான நாள். உலகிலேயே மிகப் பெரிய கிராமப் புற சுகாதாரத் திட்டம் (NRHM) தொடங்கப்பட்ட நாள் அன்று.

மத்திய சுகாதார அமைச்சராக அன்புமணி பதவியேற்ற நாளில் ‘இந்திய ஜனாதிபதிக்கு கிடைக்கும் சுகாதார வசதி நாட்டின் கடைகோடி குடிமகனுக்கும் கிடைக்க வேண்டும்’ என்று மருத்துவர் ராமதாஸ் அறிவுரை வழங்கினார்.

அதன்படி, அன்புமணியின் கடுமையான உழைப்பால் வடி வமைக்கப்பட்ட பிரம்மாண்டமான திட்டம்தான் கிராமப்புற சுகாதாரத் திட்டம். சரியாக பத்தாண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் (12-04-2005) அன்றைய பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கால் நாட்டு மக்க ளுக்கு இந்தத் திட்டம் அர்ப்பணிக்கப் பட்டது.

அப்போது, ‘யாராலும் நிறுத்த முடியாதபடி இந்தத் திட்டத்தை நாங்கள் வடிவமைத்துள்ளோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் இத்திட்டம் தொடர்ந்து செயல்படும்’ என்று அன்புமணி கூறியது இன்று உண்மையாகிவிட்டது.

இந்தத் திட்டத்தால் பிரசவத்தின் போது நேரிடும் தாய்- சேய் இறப்பு குறைந்துள்ளது. இதன்படி, இந்த 10 ஆண்டுகளில் லட்சக்கணக்கான பெண்கள், குழந்தைகள் காப்பாற் றப்பட்டிருக்கிறார்கள்.

இந்தத் திட்டத்தில் அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட்டதால், தங்கு தடையில்லாத சேவையை ஆரம்ப சுகாதார நிலையங்கள் 365 நாட்களும் நோயாளிகளுக்கு வழங்குகின்றன. குறிப்பாக, பிஹார், மத்தியப்பிரதேசம், ராஜஸ் தான், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்தத் திட்டம் மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அங்கு கிராமப் புற செவிலியர்கள் - ASHA - ஆஷாக் கள் 7 லட்சம் பேர் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். அந்த செவிலியர் கள் அந்த கிராமங்களின் மருமகள் களாகக் கருதப்படுகின்றனர்.

2005-க்கு முன்பு 30 சதவீதம் அரசு மருத்துவமனையிலும், 70 சதவீதம் தனியாரிடமும் பிரசவம் பார்த்த நிலைமை மாறியுள்ளது. 2005-க்குப் பிறகு கடந்த 10 ஆண்டு களில் 70 சதவீதம் அரசு மருத்துவ மனைகளில் பிரசவம் நடைபெற்ற தாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஆரம்ப சுகாதார நிலையங் களில் தரமான சிகிச்சை வழங்கப் படுவதால் பிரசவத்தின்போது தாய் இறப்பதும், சேய் இறப்பு விகிதமும் குறைந்தது. முன்பு 1,000 பிரசவங்களில் 63 தாய்மார்கள் இறந்தனர். இது தற்போது 37 ஆகக் குறைந்துள்ளது.

அருகில் மருத்துவமனை இல் லாமல் மலைவாழ் மக்கள் படும் அவதி இன்னும் தொடர்கதைதான். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தாற்போன்று 108 ஆம்புலன்ஸ் அவசர ஊர்தி சேவையை அன்பு மணி தொடங்கினார்.

இது மிகப் பெரிய சாதனை. மருத்துவர் ராமதாஸ் நினைத்ததுபோலவே கிராமத்து மக்களுக்கு உடனடியாக மருத்துவச் சேவை கிடைக்க 108 ஆம்புலன்ஸ் உதவுகிறது.

இந்தத் திட்டம் இந்திய சுகாதாரத் துறையில் மாபெரும் மறுமலர்ச்சி ஏற்படுத்திய திட்டம். இப்படிப்பட்ட திட்டத்தை அன்புமணி நேசித்தார் என்பதைவிட சுவாசித்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இவ்வாறு செளமியா அன்புமணி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT