தமிழகம்

காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறக்காததால் 4 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிப்பு: தமிழக அரசு முறையீடு

செய்திப்பிரிவு

காவிரி ஆற்​றில் கர்​நாடக அரசு இந்த ஆண்டு உரிய தண்​ணீரைத் திறந்​து​விடாததால் தமிழகத்​தில் சுமார் 4 லட்​சம் ஹெக்​டேர் விவசாய நிலங்​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ள​தாக தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் தெரி​வித்​துள்​ளது.

காவி​ரி​யில் கர்​நாடகம் உரிய நீரை திறக்​கவும், தமிழகத்​துக்​கான பற்​றாக்​குறை நீரை பெற்​றுத் தர காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​திற்கு உத்​தர​விட கோரியும் தமிழக அரசு தாக்​கல் செய்த மனு உச்ச நீதி​மன்​றத்​தில் நிலுவை​யில் இருந்து வரு​கிறது.

இந்த நிலை​யில் காவிரி மேலாண்மை ஆணை​யம் உத்​தர​விட்​டபடி வினாடிக்கு 3,000 கன அடி தண்​ணீரை கடந்த அக்​டோபர் 23-ம் தேதி முதல் கர்​நாடக அரசு திறந்​து​விட​வில்லை என்று தமிழக அரசு தரப்​பில் வழக்​கறிஞர் பி.கருணாகரன் உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்வு முன்பு முறை​யிட்​டார்.

மேலும், கர்​நாடக அரசு தண்​ணீர் திறக்​காததால் தமிழகத்​தில் விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. 4 லட்​சம் ஹெக்​டேர் விவசாய நிலங்​கள் பாதிப்​படைந்​துள்​ளன. இவ்​வாறு தொடர்ந்து தண்​ணீர் கிடைக்​காத நிலை​யில் தமிழக விவசாயிகள் என்​னதான் செய்ய முடியும்? என்​றும் அவர் கேள்வி எழுப்​பியதோடு, காவிரி நீர் திறப்​பது தொடர்​பான ஆணை​யத்​தின் உத்​தரவு​களை கர்​நாடக அரசு முறை​யாகச் செயல்​படுத்​தாததால் விவசாயிகளின் வாழ்​வாதா​ரம் கடுமையாக பாதிக்​கப்​படுவ​தாகக் குறிப்​பிட்​டார்.

எனவே, காவிரி நீர் தொடர்​பாக தமிழக அரசு தாக்​கல் செய்​துள்ள வழக்கை அவசர​மாக விசா​ரிக்க வேண்​டும் என வலியுறுத்​தினார். இதனைக் கேட்ட தலைமை நீதிபதி சூர்​யகாந்த் அமர்வு, காவிரி நீர் தொடர்​பான வழக்கை விரைந்து விசா​ரிப்​பது குறித்து பரிசீலிப்​ப​தாகத் தெரி​வித்​தது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT