புதுவண்ணாரப்பேட்டையில் ரேஷன் அரிசியை கள்ளச் சந்தையில் வாங்கி அரைத்து மாவாக விற்பனை செய்த அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை புதுவண்ணாரப் பேட்டை திருவொற்றியூர் நெடுஞ் சாலையில் ஒரு கிடங்கில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப் பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், உணவு பொருள் வழங் கல் பிரிவு அதிகாரிகள் போலீஸ் துணையுடன் நேற்று காலையில் அங்கு சோதனை செய்தனர். கிடங்கில் சுமார் 500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கிடங்கின் மற்றொரு பகுதிக்கு சென்று பார்த்தபோது, கிரைண்டர் கள் மூலம் ரேஷன் அரிசி அரைக்கப் பட்டு, பாக்கெட்டுகளில் அடைக்கும் வேலையில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அது குறித்து விசாரித்தபோது, இங்கு தயார் செய்யப்படும் மாவு பாக்கெட்டுகள் சென்னை முழுவதும் பல கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவது தெரிந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசார ணையில் இந்த மாவு தொழிற் சாலையை நடத்தியது அதே பகு தியை சேர்ந்த அதிமுக பிரமுகர் அய்யனார் என்பது தெரிந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.
கிடங்கில் இருந்த 500 கிலோ ரேஷன் அரிசி, 5 பெரிய கிரைண்டர் கள், ஏராளமான மாவு பாக்கெட்டு களை அதிகாரிகள் பறிமுதல் செய் தனர். ரேஷன் அரிசி மாவு என்பது தெரியாமல் இருக்க அதில் ஆப்ப சோடா மற்றும் சில ரசாயனங்கள் சேர்க்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் இந்த மாவில் சுடப்படும் இட்லி வெள்ளை நிறமாகவும், மிருதுவாகவும் இருந்துள்ளது.