தமிழகம்

தமிழக ஹாக்கி அணிக்கு குன்னூர் கல்லூரி மாணவர் தேர்வு

செய்திப்பிரிவு

தமிழக ஹாக்கி அணிக்கு, நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலம் குடகில் நாளை (ஏப்.14) முதல் 22-ம் தேதி வரை 5-வது ஜூனியர் தேசிய ஹாக்கி போட்டிகள் நடக்கின்றன. இதில் பங்கேற்கும் தமிழக அணியில் குன்னூர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த எஸ்.மெல்வின் ஜோசப் (19) இடம்பெற்றுள்ளார்.

இதுதொடர்பாக ஹாக்கி நீல்கிரிஸ் சங்கத் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் கூறும்போது, ‘சி’ பிரிவில் ஹரியானா, ஸ்டீல் பிளாண்ட்ஸ் மற்றும் உத்தரபிரதேச அணியுடன் இடம்பெற்றுள்ள தமிழக அணி, தனது முதல் போட்டியில் ஸ்டீல் பிளாண்ட்ஸ் அணியுடன் 16-ம் தேதி மோதுகிறது.

கடந்த பிப்ரவரியில் உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் நடந்த அகில இந்திய போட்டியில் தமிழகம் அணியில் மெல்வின் ஜோசப் விளையாடினார்’ என்றார்.

ஹாக்கி நீல்கிரிஸ் சங்கம் சார்பில், மெல்வின் ஜோசப்புக்கு குன்னூரில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

SCROLL FOR NEXT