தமிழகம்

வெளிநாடுகளில் இந்திய மாம்பழத்துக்கு தடை நீக்கம் எதிரொலி: ஏற்றுமதிக்கான கட்டமைப்பு வசதிகளை அதிகளவில் ஏற்படுத்த வேண்டும் - தமிழக மா விவசாயிகள் வலியுறுத்தல்

எஸ்.கே.ரமேஷ்

இந்திய மாம்பழங்கள் இறக்கு மதிக்கு இருந்த தடையை பல்வேறு நாடுகள் நீக்கியதையடுத்து மா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். அதே நேரம் ஏற்றுமதிக் கான உள்கட்டமைப்பு வசதிகளை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலக அளவில் 63 நாடுகளில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆண்டுக்கு 1.90 கோடி டன் மாம்பழம் விளை விக்கப்படுகிறது. இதில், தமிழகத் தில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 926 ஹெக்டேர் பரப்பில் மா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த மாவட்டத்தில் மட்டும் ஆண்டுக்கு சராசரியாக 4 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. இதில், 3 லட்சம் மெட்ரிக் டன் மாங்கூழ் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட மாங்கூழ் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும் மாம்பழக் கூழ் 90 சதவீதம் சவுதி அரேபியா, துபாய், ஏமன், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், இந்திய மாம் பழங்கள் இறக்குமதிக்கு விதிக்கப் பட்ட தடையை 28 நாடுகளை உள் ளடக்கிய ஐரோப்பிய யூனியன் சமீபத்தில் நீக்கி உள்ளது. அதனால் இந்தியாவில் விளைவிக்கப்படும் மாம்பழங்களை ஐரோப்பிய நாடு களுக்கு ஏற்றுமதி செய்யலாம் என விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித் துள்ளது.

இது குறித்து தமிழக விவசாயி கள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி ‘தி இந்து’விடம் கூறியதாவது:

‘‘ஏற்றுமதி தரம் வாய்ந்த மாம் பழங்களை சாகுபடி செய்வதில் விவசாயிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். வண்டு இல்லா மாம்பழ உற்பத்தி தொழில்நுட்பம், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பயிர் வளர்ச்சி ஊக்கிகளை பயன் படுத்தி மா பூக்கும் திறனை அதிகரித் தல், சுற்றுச் சூழலுக்கு உகந்த பூச்சிக்கொல்லிகளை பயன்படுத் துவது குறித்து விவசாயிகள் கலந்தாலோசித்து நடைமுறை படுத்தி வருகின்றனர்.

இருந்தாலும், மா ஏற்றுமதிக்கான தரச்சான்றிதழ் பெற மைசூர் பரி சோதனை கூடத்தைச் சார்ந் திருக்க வேண்டியுள்ளது. மேலும், மாம்பழத்தில் நோய் நீக்கும் கதிர் வீச்சு முறைக்கான கட்டமைப்பு வசதிகள் ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சார்ந்தி ருக்க வேண்டியுள்ளது. இதனால், மா விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுவது மட்டுமல்லாமல் காலதாமதமும் ஏற்படுகிறது.

எனவே, தமிழகத்தில் குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா ஏற்றுமதிக்கான உள் கட்டமைப் புகளை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும். குறிப் பாக பையூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளா கத்தில் மாம்பழ ஏற்றுமதிக்கான தரக்கட்டுப்பாடு பரிசோதனை கூடத்தை அமைக்க வேண்டும்.’’

இவ்வாறு அவர் கூறினார்.

மா ஏற்றுமதிக்கான தரச்சான்றிதழ் பெற மைசூர் பரிசோதனை கூடத்தையும் நோய் நீக்கும் கதிர்வீச்சு முறைக்கான கட்டமைப்பு வசதிகள் ஆந்திரம், கர்நாடகம் மாநிலங்களைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. கூடுதல் செலவு ஏற்படுவதுடன் காலதாமதமும் ஏற்படுகிறது.

SCROLL FOR NEXT