தமிழகம்

தீயணைப்புத்துறையினர் 6 பேருக்கு முதல்வர் பதக்கம்

செய்திப்பிரிவு

தீயணைப்பு சேவை தினத்தை முன்னிட்டு தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையைச் சேர்ந்த ஆறு பேருக்கு சிறந்த பணிக்கான பதக்கம் வழங்கப்படுகிறது.

தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் தீயணைப்பு சேவை தினம் இன்று (ஏப்ரல் 14-ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து ராணிப்பேட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி தாண்டவன், சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த முதன்மை தீயணைப்பு அலுவலர் விஜயன், தக்கலை முதன்மை தீயணைப்பு அலுவலர் பாலாஜி, ராணிப்பேட்டை தீயணைப்பு அலுவலர் சரவணகுமார், சுரேஷ்குமார், சென்னை கிண்டி தீயணைப்பு அலுவலர் பிரசாத் ஆகியோருக்கு தமிழக முதல்வரின் சிறப்பு பணிக்கான பதக்கம் மற்றும் ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நிலைய அதிகாரி தாண்டவனுக்கு ரூ.3000, முதன்மை தீயணைப்பு அலுவலர்கள் விஜயன் மற்றும் பாலாஜிக்கு தலா ரூ.2500, தீயணைப்பு அலுவலர்கள் சரவணகுமார், சுரேஷ்குமார் மற்றும் பிரசாத்திற்கு தலா ரூ.2000 ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. இந்த பதக்கம் மற்றும் பரிசுகளை இன்று நடக்கும் விழாவில், தமிழக கவர்னர் ரோசய்யா வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT