தமிழகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய மாநாடு இன்று தொடக்கம்

எம்.சரவணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து 59 பிரதிநிதிகள் நேற்று புறப்பட்டுச் சென்றனர்.

மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்க ராஜன், அ.சவுந்தரராசன், கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, பி.சம்பத் ஆகியோருடன் கடந்த பிப்ரவரியில் சென்னையில் நடந்த மாநில மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட 50 பிரதிநிதிகளும், 3 பார்வையாளர்களும் மாநாட்டில் பங்கேற்கின்றனர். இவர்கள் 59 பேரும் ரயில் மூலம் நேற்று விசாகப்பட்டினம் புறப்பட்டுச் சென்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக ஒருவர் 3 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும். தற்போதைய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

புதிய பொதுச் செயலாளர் பதவிக்கு பலரது பெயர்கள் கூறப்பட்டாலும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான சீதாராம் யெச்சூரிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT