அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை பலபகுதிகளிலும் வெள்ளியன்று பெய்தது. சென்னையில் கனமழை பெய்தது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மகாபலிபுரம் மற்றும் தஞ்சை மாவட்ட வல்லம் பகுதியில் 10 செமீ மழை பதிவாகியுள்ளது. காட்டுமன்னார் கோயில் மற்றும் நீடாமங்கலத்தில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது.
திண்டிவனம், உடுமலைபேட்டை, மன்னார்குடி, பாபனாசம் ஆகிய ஊர்களில் 8 செமீ மழையும், திருவாரூர் மாவட்டம் கொடவாசல், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, வலங்கைமான், கும்பகோணம் ஆகிய ஊர்களில் 7 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுதும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்துள்ளார்.