தமிழகம்

கல்லில் கலைவண்ணம் கண்ட கிருஷ்ணாபுரம் கோயிலில் கும்பாபிஷேகத்துக்கு காத்திருப்பு - 3 ஆண்டுகளாக மூலவரை தரிசிக்க முடியாத நிலை

என்.சுவாமிநாதன்

சிற்பக் கலைக்கு மிகவும் பிரசித்தி பெற்ற கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயிலின் கும்பாபிஷேகப் பணிகள் முடங்கிக் கிடப்பதால், மூலவரை தரிசித்து 3 ஆண்டுகள் ஆவதாக பக்தர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் 10-வது கிலோ மீட்டரில் உள்ளது கிருஷ்ணாபுரம். சிற்பக் கலைக்கு மிகவும் பிரசித்தி பெற்ற வெங்கடாசலபதி கோயில் இங்கு அமைந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து இங்குள்ள சிற்பங்களின் அற்புதத்தை பார்த்துச் செல்கின்றனர்.

ஆலயத்தில் மூலவராக வெங்கடா சலபதியும், உற்சவராக சீனிவாச பெருமாளும் உள்ளனர்.

16-ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கர் இந்த கோயிலை புனர மைப்பு செய்து, சிற்பங்களையும் செய்து வைத்ததாக கூறுகின்றனர் உள்ளூர் மக்கள்.

கைகூடுமா பொற்காலம்?

கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டி இந்த ஆலய வெங்கடாசல பதியை வழிபடுவது பிரசித்தம். திருப்பதிக்கு வேண்டிக் கொண்டு, அங்கு செல்ல முடியாத சுற்றுவட்டார கிராம மக்கள் இங்கு வந்து முடிக் காணிக்கை செலுத்துகின்றனர். அதிக அளவில் திருமணங்களும் இங்கு நடைபெறுவது வழக்கம்.

புரட்டாசி மாதம் 11 நாட்கள் பிரம்மோற்சவ விழா இங்கு கொண் டாடப்படுகிறது. திருப்பதியில் கொடி இறங்கும் நாளில், இங்கு கொடி பட்டம் ஏறுவது காலம் காலமாக பின்பற்றப்படுகிறது. ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழா நடைபெற வில்லை நேர்த்திக் கடன்களும் நிறைவேற்றப்படுவது இல்லை. கும்பாபிஷேகத்துக்காக, பாலாலயம் முடிந்து 3 ஆண்டுகளாக மூலவரை தரிசிக்க முடியாததுதான் காரணம் என குற்றம்சாட்டுகின்றனர் பக்தர்கள்.

இதுகுறித்து உள்ளூரைச் சேர்ந்த சண்முகவேல் கூறும்போது, “1998-ம் ஆண்டு கடைசியாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. 3 ஆண்டுகளுக்கு முன்பு பாலாலயம் நடந்தது. கும்பாபிஷேக பணி துளிகூட நடக்கவில்லை. மூலவர் இல்லாத கோயிலில் யாரை தரிசிப்பது? புரட்டாசி பிரம்மோற்சவ விழாவையும் அறநிலையத்துறை நிறுத்திவிட்டது” என்றார்.

எழுத்தாளர் லட்சுமி மணிவண் ணன் கூறும்போது, “இங்குள்ள சிற்பங்கள் துல்லியத் தன்மையால் மிகவும் சிறப்பு பெறுபவை. மூலவரை தரிசிக்க முடியாததால் வரலாற்று சிறப்புமிக்க இந்த கோயில் பெருமை இழந்து நிற்கி றது. அரசு விழாக்களை இதுபோன்ற கலைநுட்பமான கோயில் அமைந் துள்ள பகுதியில் நடத்துவதன் மூலம் இதன் பழமையையும், நம் பண் பாட்டையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியும்” என்றார்.

அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரிடம் கேட்ட போது, “கும்பாபிஷேகப் பணி களுக்கு போதிய நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.

பணிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இன் னும் 5 மாதங்களில் கும்பாபிஷே கத்தை நடத்தி விடுவோம்’ என்றார்.

SCROLL FOR NEXT