தமிழகம்

திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்பில், ‘சென்னையில் வரும் 24-ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்படு கிறது. கூட்டத்துக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

மாவட்டச் செயலாளர் களுக்கு வழங்குவதற்கான தேர்தல் நிதி வசூல் புத்தகங்கள் முழுமையாக அச்சிடப்படாததும், திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் உடல்நிலை சரியில்லாததுமே கூட்டம் தள்ளி வைக்கப்பட்டதற்கான காரணங்கள் என்று திமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்குள் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்கும் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT