தமிழகம்

சிலிண்டர் கிடங்கில் அமைச்சர் ஆய்வு: கணக்காளர் சஸ்பெண்ட்

செய்திப்பிரிவு

சமையல் எரிவாயு சிலிண்டர் கணக்குகளை சரிவர பராமரிக்காத, அயனாவரம் சிலிண்டர் கிடங்கின் கணக்காளரை கூட்டுறவுத்துறை அமைச்சர் சஸ்பெண்ட் செய்துள் ளார்.

சென்னை அயனாவரத்தில் உள்ள திருவல்லிக்கேணி கூட்டுறவு நகர சங்கத்தின் சமையல் எரிவாயு சிலிண்டர் கிடங்கில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று காலை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, கிடங்கில் இருப்பில் உள்ள சிலிண்டர்களின் எண்ணிக்கை மற்றும் இருப்பு பதிவேட்டை சரிபார்த்தார்.

அப்போது, 19 கிலோ எடை கொண்ட, 5 வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விற்பனை தொகை, வசூலிக்கப் படாதது கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில், கிடங்கின் கணக்காளர் கவுதமை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் உத்தரவிட்டார். கிடங்கின் அனைத்து பதிவேடு களையும் தணிக்கை செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் அவர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் சிந்தாமணி ரேஷன் கடை யிலும் அவர் ஆய்வு நடத்தினார்.

SCROLL FOR NEXT