தமிழகம்

பசுவதை தடுப்பு சட்டம் கோரி ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

பசுவதை தடை சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தக் கோரி இந்து மகா சபையை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உச்ச நீதிமன்றம் அறிவித்த படி பசுவதை தடுப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்து மகா சபை சார்பில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அந்த அமைப்பின் மாநில தலைவர் ராஜசேகர் கூறியதாவது:

பசுக்கள் கொல்லப்படு வதை தடுக்க மகாராஷ் டிரத்தில் சட்டம் நிறைவேற் றப்பட்டுள்ளது. இந்துக் களால் புனிதமாக கருதப்படும் பசுக்கள் வியாபார நோக்கத் துக்காக கொல்லப்படுகின் றன. நாடு முழுவதும் பசு மாடுகளை கொல்லும் கூடா ரங்கள் சுமார் 30 ஆயிரம் உள்ளன. கடந்த 2005-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பசு வதைக்கு எதிரான சட்டத்தை அறிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்திலும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் உள்ளது. இச்சட்டத்தில் பசு மாடுகள் கொல்லப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பசுக் களை கொல்வதற்கு எதிரான இந்த சட்டங்களை நாடு முழு வதும் அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT