தமிழகம்

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி பயணம்

செய்திப்பிரிவு

முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற் பதற்காக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரும் 4-ம் தேதி டெல்லி செல்கிறார்.

டெல்லியில் வரும் 5-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாடு நடக்கிறது. மாநாட்டுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமை வகிக்கிறார். மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

இதில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 4-ம் தேதி மாலை அல்லது 5-ம் தேதி அதிகாலை டெல்லி புறப்பட்டுச் செல்வார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT