தமிழகம்

திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயில் உண்டியலில் ரூ.29.95 லட்சம் காணிக்கை

செய்திப்பிரிவு

திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயில் உண்டியலில் 29.95 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு, தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வருவது வழக்கம்.

அவ்வாறு வரும் பக்தர்கள், கோயில் உண்டியலில் செலுத்தும் காணிக்கை மாதம் ஒரு முறை அல்லது இருமுறை எண்ணப்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்று முன் தினம் காலை முதல், இரவு வரை எண்ணும் பணி நடைபெற்றது. கோயில் இணை ஆணை யர் புகழேந்தி, தக்கார் ஜெயசங்கர் ஆகியோர் முன்னிலையில், கண்காணிப்பு கேமரா சகிதம், 100-க்கும் மேற்பட்ட ஊழியர் கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில், ரூ.29,95,775, 285 கிராம் தங்கம் மற்றும் 766 கிராம் வெள்ளி ஆகியவை பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT