தமிழகம்

மேலூர் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சிறை வார்டனை தாக்கியதாக 6 பேர் மீது வழக்கு பதிவு

செய்திப்பிரிவு

மதுரை மாவட்டம், மேலூரில் சிறார் சீர்திருத்தப் பள்ளி (பாஸ்டல் பள்ளி) செயல்படுகிறது. மதுரை உட்பட தென்மாவட்டங்களில் குற்ற வழக்குகளில் கைது செய்யப் படும் 18 முதல் 21 வயதுக்குட் பட்டவர்கள் இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கைதிகளிடையே நேற்று முன்தினம் காலை திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்த கொலை வழக்கு விசாரணை கைதிகளான சகோதரர்கள் இருவரை தாக்கினர். பதிலுக்கு அவர்களும் தாக்கினர்.

இதை தடுக்க முயன்ற முதன்மை தலைமை சிறைக்காவலர் சந்தானம் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 5 கைதிகளுக்கும் காயம் ஏற்பட்டது.

இது தொடர்பாக சிறார் சீர் திருத்தப் பள்ளிக்கான உதவி சிறை அலுவலர் சலீம்பாட்ஷா மேலூர் போலீஸில் புகார் செய்தார். அதன் பேரில் சிறைக்காவலர் சந்தானத்தை கத்தியால் தாக்கி காயப்படுத்தி யது, அரசு பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தது உட்பட 7 பிரிவுகளின் கீழ் மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த 3 பேர் உட்பட 6 கைதிகள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சீர்திருத்தப் பள்ளிக்குள் மீண்டும் தாக்குதல் நடைபெறாமல் தடுப்பதற்காக மதுரை மத்திய சிறை கண்காணிப் பாளர் அறிவுடைநம்பி உத்தரவின் பேரில் 12 கைதிகள் தஞ்சை, புதுகைக்கு நேற்று முன்தினம் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சக்கிமங்கலம் சகோதரர்கள் உட்பட 3 பேர் நேற்று அரியலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

          
SCROLL FOR NEXT