திமுகவினருடன் இணைந்த அந்நிய சக்திகளால் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தோல்விக்கு பொறுப் பேற்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா செய்ததாக தகவல் பரவியது. இதையடுத்து, அவரது ஆதரவாளர்கள், ஸ்டாலின் வீட்டு முன்பு கூடி, ராஜி னாமா செய்யக்கூடாது என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினர். இதில் 2 நிருபர்கள் காயமடைந் தனர். டிவி கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், பத்திரிகையாளர் கள் மீதான தாக்குதல் குறித்து மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘திமுகவினருடன் இணைந்த அந்நிய சக்திகளால், விரும்பத்தகாத சம்பவங்களை சந்தித்த ஊடக நிருபர்களுக்கு என் அனுதாபங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் ஞாயிற்றுக்கிழமை இரவு, திமுக அமைப்புச் செயலா ளர் டி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்ட அறிக்கையில், திமுகவினர் மத்தியில் ஊடுருவிய தீய சக்திகளால் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட் டதற்கு வருத்தத்தை தெரிவிப்பதாகக் கூறியிருந்தார்.
இந்த தாக்குதல் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், 11 பேரை திங்கள்கிழமை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். அவர்கள் அனைவரும் திமுகவினர் என்பதும், 7 பேர் இளைஞரணி நிர்வாகிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.