தமிழகம்

ரயில் தண்டவாளத்தில் கொடி நட்டபோது மின்சாரம் பாய்ந்தது: வாழ்வுரிமைக் கட்சித் தொண்டர் மருத்துவமனையில் மரணம்

செய்திப்பிரிவு

ரயில் தண்டவாளத்தில் கொடிக் கம்பத்தை நட்டபோது மின்சாரம் பாய்ந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொண்டர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ஆந்திரத்தில் 20 அப்பாவித் தமி ழர்கள் படுகொலை செய்யப்பட்ட தைக் கண்டித்தும், இது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரியும் தமிழக ஆளுநர் ரோசய்யாவிடம் மனு கொடுப்பதற்காக தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் தமிழர் நீதிப் பேரணி சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகே நேற்று நடைபெற்றது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி யின் தலைவரும், தமிழர் வாழ் வுரிமை கூட்டமைப்பின் ஒருங் கிணைப்பாளருமான தி.வேல் முருகன் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக் கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

அப்போது தமிழக வாழ் வுரிமைக் கட்சியின் தொண்டர் சிதம்பரத்தை சேர்ந்த வினோத் (21) மற்றும் சில தொண்டர்கள் அத்துமீறி கிண்டி ரயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் தண்டவாளத்தில் இறங் கினர். தண்டவாளத்தின் நடுவில் தங்களுடைய கட்சியின் கொடியை நடும் பணியில் ஈடுபட்டிருந்த வினோத் கொடி கட்டியிருந்த இரும்பு கம்பியை மேலே தூக்கி னார். அப்போது மேலே சென்று கொண்டிருந்த 25 ஆயிரம் வோல்ட் உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து வினோத் தூக்கி வீசப்பட்டு தண்ட வாளத்தில் விழுந்தார்.

உடலில் தீப்பற்றி எரிந்த நிலை யில் உயிருக்குப் போராடிக் கொண் டிருந்த வினோத்தை தொண்டர் களின் உதவியுடன் போலீஸார் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீக்காயங்கள் சிகிச் சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட வினோத்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வினோத் நேற்று காலை 7 மணிக்கு உயிரிழந்தார். இதையடுத்து பிரேதப் பரி சோதனை செய்யப்பட்டு வினோத் உடல் உறவினர்களிடம் ஒப்படைக் கப்பட்டது.

முன்னதாக இந்த தகவலைக் கேள்விப்பட்ட தமிழக வாழ்வுரி மைக் கட்சி தலைவர் தி.வேல் முருகன், மதிமுக பொதுச் செய லாளர் வைகோ, விடுதலைச் சிறுத் தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலர் மருத்துவமனைக்கு வந்து வினோத் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது வைகோ கூறும்போது, “போலீஸாரின் கெடுபிடி மற்றும் கட்டுப்பாடுதான் தொண்டர் உயிரி ழக்க முக்கிய காரணம்” என்றார்.

ரூ.5 லட்சம் நிதியுதவி

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வெளி யிட்ட அறிக்கையில், “வினோத்தை இழந்துவாடும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள் கிறேன். தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வினோத் குடும்பத் துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக் கப்படும்” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT