தமிழகம்

பிறந்து 4 நாளே ஆன குழந்தைக்கு பேஸ்மேக்கர்: கோவை தனியார் மருத்துவமனை சாதனை

செய்திப்பிரிவு

மனிதனுக்கு சராசரியாக இதயத் துடிப்பு 72 இருக்க வேண்டும். அதேசமயம் பிறந்த குழந்தையின் இதயம் நிமிடத்துக்கு 120 முதல் 160 வரை துடிக்க வேண்டும். ஆனால், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த நைஸி என்ற பெண்ணுக்கு சிசேரி யன் மூலம் பிறந்த குழந்தையின் இதயத் துடிப்பு நிமிடத்துக்கு 40-தான் இருந்தது. பிறப்பிலேயே இதயத்தில் முழு அடைப்பு என்பது அபூர்வ நிகழ்வாகும். இதயத்தின் துடிப்பு இயல்புக்கு மாறாக இப்படி இருப்பதால் இதயத்தில் அடைப்பு ஏற்படுகிறது. அதனால் எந்த நேரத்திலும் இதயத்தில் நிரந்தர அடைப்பு ஏற்பட்டு குழந்தைக்கு மரணம் சம்பவிக்கலாம் என்ற நிலை.

அதைத்தொடர்ந்து கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனையில் பச்சிளங் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. பச்சிளங் குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் ஏ.ஆர்.ஸ்ரீனிவாஸ், குழந்தைகளுக்கான இதய சிகிச்சை மருத்துவர் டாக்டர் எஸ்.தேவ பிரசாத் ஆகியோர் அக்குழந்தைக்கு சோதனைகளை நடத்தினர்.

விரிவான சோதனைகளுக்கு பிறகு குழந்தைக்கு பிறப்பிலேயே இதயத்தில் முழு அடைப்பு இருந் ததை கண்டுபிடித்து உறுதி செய்தனர். இதை சரிசெய்ய வழி? பெற்றவர்கள் பதறினர். குழந் தைக்கு பேஸ் மேக்கர் வைப்பது தான் என்றனர் மருத்துவர்கள். பிறகு பெற்றோர்கள் சம்மதத் துடன் குழந்தை தீவிர சிகிச் சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட நான் காவது நாள் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு பேஸ்மேக்கர் எனப்படும் இதயத்துடிப்பு கருவி பொருத்தப்பட்டது. இந்த அபூர் வமான சிகிச்சைக்குப் பிறகு குழந்தை நலமுடன் உள்ளது.

இது குறித்து அறுவைச்சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் கூறியது:

இதய அறுவைச்சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.பாலசுந்தரம், இருதய மயக்கவியல் நிபுணர் டாக்டர் எம்.கே.சிவக்குமார், குழந்தைகள் இதய சிகிச்சை மருத் துவர் டாக்டர் எஸ்.தேவபிரசாத், மேலும் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை வல்லுநர் டாக்டர் சுபாஷ் காலே ஆகியோர் கொண்ட குழுதான் இந்த பேஸ்மேக் கர் கருவியை நிரந்தரமாக குழந்தையின் உடலில் பொருத்தியது. இந்த அறுவைச் சிகிச்சையும், பேஸ் மேக்கர் பொருத் தும் விஷயமும் மருத்துவ உலகில் சிக்கலான விஷயம். குழந்தையின் இடது பக்க மார்புக் காம்பின் கீழே ஒரு சிறு துளையிட்டு பேஸ் மேக்கர் கருவியின் முனைகள் இதயத்தின் இடது புற அறையில் இணைக்கப்பட்டது.

பேஸ் மேக்கர் கருவியை, குழந்தையின் வயிற்றின் மேல் பாகத்தில் ஒரு பாக்கெட்டை உண்டாக்கி அதில் பொருத்தப் பட்டது. இந்த அரிய அறுவைச் சிகிச்சையை நாங்கள் செய்து முடித்த பின்னர் நிமிடத்திற்கு 40 ஆக இருந்த குழந்தையின் இருதயத்துடிப்பு நிமிடத்திற்கு 125 தடவை துடிக்கத் தொடங்கியது. குழந்தைக்கு 120 முதல் 160 வரை துடிப்பு இருக்க வேண்டும். இதயத்தின் அமைப்பு இயல்புக்கு மாறாக இருப்பதால் இதயம் துடிப்பதில் அடைப்பு ஏற்படுகிறது. இனி எந்தப் பிரச்சினையும் இன்றி சராசரி மனிதன் போலவே காலம் முழுக்க இந்த குழந்தை வாழ லாம் என்று தெரிவித்தனர் மருத்து வர்கள்.

இந்த அரிய சிகிச்சையை வெற்றி கரமாக முடித்த மருத்துவ குழுவினருக்கு கேஎம்சிஎச் தலைவர் டாக்டர் நல்லா பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

SCROLL FOR NEXT