தமிழகம்

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமிக்கு பாராட்டு விழா

செய்திப்பிரிவு

பத்மபூஷன் விருது பெற்ற முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

பத்மபூஷன் விருது பெற்றதற் காக, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமிக்கு விவேகானந்தா கல்விக்கழகம் சார்பில் சென்னை வேப்பேரியில் உள்ள அகர்வால் வித்யாலயா பள்ளியில் நேற்று மாலை பாராட்டு விழா நடந்தது.

கல்விக் கழகம் செயலாளர் டி.சக்கரவர்த்தி வரவேற்புரை யாற்றினார். கழகத்தின் துணைத் தலைவர் துலிச்சந்த் ஜெயின் தலைமை உரையாற்றினார். துணைத் தலைவர் எஸ்.குருமூர்த்தி சிறப்புரையாற்றினார். விழாவில் என்.கோபால்சாமிக்கு விருது மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவிக் கப்பட்டது. பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளியின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முக்கலா ஆண்டாளம்மா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கண்ணைய செட்டி, லயன்ஸ் கிளப் (பல்லா வரம்) சி.ஆர்.நரசிம்மன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர். இறுதியாக என்.கோபால்சாமி நன்றி தெரிவித்து உரையாற்றினார்.

SCROLL FOR NEXT