தமிழகத்தில் மகப்பேறு காலத்தில் தாய்- சேய் இறப்பு விகிதத்தை குறைக்கும் விதமாக சர்வதேச மருத்துவக் குழுவினர் நேற்று திருச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த சில மாதங்களாக சேலம், தருமபுரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைகள் இறந்தது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள சிங்கப்பூர் சர்வதேச தேசிய அறக்கட்டளையைச் சேர்ந்த, சிங்ஹெல்த் மற்றும் கே.கே. பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை நிர்வாகத்தினர், தமிழக சுகாதாரத் துறையை அணுகி, தாய்- சேய் இறப்பு விகிதத்தை குறைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இதையடுத்து தமிழக சுகாதாரத் துறையின் அனுமதி யின்பேரில் கடந்த செப்டம்பர் மாதம் 5 பேர் கொண்ட சிங்கப்பூர் மருத்துவக் குழுவினர் செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தருமபுரி, சேலம் மற்றும் திருச்சி உள்ளிட்ட மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தினர்.
அதைத்தொடர்ந்து சிங் ஹெல்த் மற்றும் கே.கே. பெண் கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையைச் சேர்ந்த 4 மருத்துவர்கள் நேற்று திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். பின்னர் திருச்சி அரசு மருத்துவ மனை மகப்பேறு தலைமை மருத்துவர் பரிமளாதேவி உள் ளிட்ட மருத்துவர்களுடன், திருச்சி மருத்துவமனையில் பிரசவ காலத்தின்போது மேற்கொள் ளப்படும் நடைமுறைகள் குறித்து கேட்டறிந்தனர்.
இதுதொடர்பாக மருத்துவ மனையைச் சேர்ந்த மருத்து வர்கள் கூறும்போது, “புதுக் கோட்டை, கரூர், தஞ்சை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான கர்ப்பிணிகள் திருச்சி மருத்துவமனைக்கு மகப்பேறு சிகிச்சைக்கு வரு கின்றனர். திருச்சி அரசு மருத் துவமனையில் கடந்த 2012-ம் ஆண்டு 40 குழந்தைகளும், 2013-ம் ஆண்டு 32 குழந்தைகளும் இறந்துள்ளன என்பதால் சிங்கப்பூர் குழுவினர் திருச்சியை தேர்வு செய்திருக்கலாம்.
தாய்- சேய் இறப்பு விகிதத்தைக் குறைக்கும் விதமாக இங்குள்ள மகப்பேறு பிரிவு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியா ளர்களுக்கு, சிங்கப்பூர் மருத் துவக் குழுவினர் பயிற்சியளிக்க உள்ளனர்.
மேலும், இங்கு பணியாற்றும் மருத்துவர் களையும், செவிலியர்களையும் சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று மகப்பேறு காலத்தில் அங்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் குறித்து பயிற்சியளிக்க உள்ளனர்.
முதற்கட்டமாக திருச்சி அரசு மருத்துவமனையை தேர்வுசெய்துள்ள மருத்துவக் குழுவினர் அதன் பின் தமிழகத்தில் உள்ள பிற மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும் பயிற்சி அளிக்கலாம்” என்று தெரிவித்தனர்.