தமிழ்நாடு வேளாண் விரிவாக்க சார்நிலைப் பணியில் 417 உதவி வேளாண் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்காக வரும் 18-ம் தேதி (சனிக்கிழமை) சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய 6 இடங்களில் எழுத்துத்தேர்வு நடத்தப் பட உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. விண் ணப்ப எண்ணை குறிப்பிட்டு ஹால் டிக் கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்நிலையில் உரிய கல்வித்தகுதி இல்லாத காரணத்தினால் 138 பேரின் விண்ணப்பங் களை டிஎன்பிஎஸ்சி நிராகரித்துள்ளது.