தமிழகம்

மே 4-ல் கண்ணகி கோயில் திருவிழா

செய்திப்பிரிவு

மே 4-ம் தேதி நடைபெறும் கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழா வைக் காண காலை 5 மணிமுதல் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கி தேனி, இடுக்கி மாவட்ட ஆட்சியர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தமிழக-கேரள எல்லையில் அமைந் துள்ள கண்ணகி கோயிலில் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி அன்று திரு விழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு மே 4-ம் தேதி திருவிழா நடைபெற உள்ளது. விழாவைக் காண தமிழகம், கேரளத்தில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரு கின்றனர்.

பக்தர்களின் அடிப்படை வசதிகள், விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று தேக்கடி ராஜீவ்காந்தி நினைவு வன விலங்கு ஆராய்ச்சிக்கூட்ட அரங்கில் நடைபெற்றது.

தமிழகம் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடாசலம், கேரள அரசு சார்பில் இடுக்கி ஆட்சியர் வி.ரதீஸ்சன் தலைமை வகித்தனர். இக்கூட்டத்தில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் ஏ.பொன்னம்மாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், பிளாஸ்டிக் கப், பாலிதீன் பை, போதை பொருட்கள், அசைவ உணவு பொருட்களை பக்தர்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. குடிநீருக்கு 1, 2 லிட்டர் கேன்கள் கொண்டு செல்லக்கூடாது. 5 லிட்டர் கேன் மட்டுமே பயன்படுத்த வேண்டும். முடி காணிக்கை செலுத்த வேண்டும் என்றால் கோயில் அடிவாரத்தில் உள்ள பளியங்குடியில் செலுத்தலாம். பூஜை பொருட்களை துணிப் பை, காகிதப் பையில் கொண்டு செல்லலாம் என முடிவு செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT