தமிழகம்

சவுதி புறப்பட்ட விமானத்தில் கோளாறு

செய்திப்பிரிவு

சென்னையில் இருந்து சவுதி புறப்பட்ட விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

சென்னையில் இருந்து சவுதிக்கு 292 பயணிகளுடன் விமானம் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது திடீரென விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். இதுபற்றி உடனடி யாக கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தார். இதையடுத்து விமான நிலைய இன்ஜினீயர்கள் வந்து கோளாறை சரிசெய்ய முயற்சி செய்தனர். ஆனால் நள்ளிரவு வரை கோளாறை சரிசெய்ய முடியவில்லை. இதனைத் தொடர்ந்து விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட பிறகு, விமானம் சவுதிக்கு புறப்பட்டுச் செல்லும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

          
SCROLL FOR NEXT