விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பால கிருஷ்ணன் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
2013-14-ம் ஆண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய இழப்புக்கு ரூ.444 கோடி பயிர்க்காப்பீடு தொகை வழங்கிட தேசிய பயிர்க் காப்பீட்டுக் கழகம் மதிப்பீடு தயார் செய்தது. இதில் மத்திய அரசின் பங்காக ரூ.196 கோடியும், மாநில அரசின் பங்காக ரூ.196 கோடியும், மீதித் தொகையை வேளாண் காப்பீட்டுக் கழகமும் வழங்கிட வேண்டும்.
இவ்வாறு இழப்பீட்டுத் தொகை மதிப்பீடு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. எனி னும் இதுவரை பயிர்க் காப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப் பட வில்லை. வறட்சியினால் அதிகம் பாதிப்புக்குள்ளான ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மட்டும் ரூ.224 கோடி பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டியுள்ளது.
எனவே தமிழக அரசு இப்பிரச் சினையில் உடனடியாக தலையிட்டு, பயிர்க் காப்பீட்டுத் தொகை ரூ.444 கோடியை உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.