தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப் படையில் பணியாற்றி வரும் 5 ஆயிரம் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு நர்ஸ்கள் சங்கத் தின் தலைவர் பா.அறிவுக்கண் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலக செவிலியர் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்படு கிறது. செவிலியர் தினத்தை முன் னிட்டு அரசு மருத்துவமனைகளில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு நர்ஸ்கள் சங்கத்தின் தலை வர் பா.அறிவுக்கண் கூறியதாவது:
நோயாளிகளுக்கு சேவை செய்வதையே, கடமையாக செவிலியர்கள் செய்து வருகின் றனர். டாக்டர்கள் நோயாளிகளை பார்த்துவிட்டு சென்றுவிடுவார். ஆனால், செவிலியர்கள் தான் நோயாளிகளை அரவணைத்து கவ னித்துக் கொள்கின்றனர். தமிழகத் தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 17 ஆயிரம் செவிலியர்கள் பணி யாற்றி வருகின்றனர். தமிழக மருத்துவமனைகளில் முன்பு இருந் ததை விட நோயாளிகளின் எண் ணிக்கை அதிகரித்துள்ள போதி லும் செவிலியர்களின் எண்ணிக் கையை அரசு அதிகரிக்கவில்லை. இதனால், நர்ஸ்கள் பற்றாக்குறை நிலவுகிறது. தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.