தமிழகம்

மேலும் 100 சிறிய பேருந்துகள் விரைவில் இயக்கம்: சென்னையில் புதிய வழித்தடங்கள் தேர்வு

செய்திப்பிரிவு

அடுத்த ஓரிரு மாதங்களில் புதிய வழித்தடங்களில் 100 சிறிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சிறிய பேருந்துகளுக்கான பாடிகட் டும் பணி நிறைவடைந்துள்ள நிலையில் அதற்கான முன்னேற் பாடுகளில் மாநகர போக்குவரத் துக் கழகம் ஈடுபட்டுள்ளது.

சென்னையில், போக்குவரத்து இணைப்பில்லா பகுதிகளிலிருந்து அருகிலுள்ள பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் விமான நிலையத்தை இணைக்கும் வகை யில் ஏற்கெனவே 100 சிறிய பேருந்து கள் இயக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, பல்லாவரம், ராமாபுரம், போரூர், குரோம் பேட்டை, அம்பத்தூர், கோயம்பேடு ஆவடி, மணலி, மாதவரம், வில்லிவாக்கம், மூலக்கடை, புதூர், கொரட்டூர், பெரம்பூர், அசிசி நகர், செங்குன்றம், காரனோடை உள்ளிட்ட முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் சிறிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த சிறிய பேருந்து சேவைக்கு சென்னைவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள் ளது. குறிப்பாக பெண்கள், முதியோர் இந்த பேருந்துகளுக் காக காத்திருந்து பயணம் செய் கின்றனர். எனினும், இத்தகைய பேருந்தில் 27 பேர் மட்டுமே உட்கார்ந்து செல்ல முடியும். இதனால், தமிழக அரசு மேலும் 100 சிறிய பேருந்துகளை இயக் கும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு அறிவித்தார்.

இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘100 சிறிய பேருந்து களுக்கு பாடிகட்டும் பணி முடிவடைந்துள்ளது. இதற்கான புதிய வழித்தடங்களை தேர்வு செய்துள்ளோம். இதற்காக போக்குவரத்து துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்துள்ள னர். இது தவிர, தன்னார்வ அமைப்புகள், பொதுநலச்சங் கங்களின் மனுக்களை பெற்று வழித் தடங்களை தேர்வு செய்துள்ளோம். விரிவுப்படுத்தப்பட்ட மாநகராட்சி பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஓரிரு மாதங்களில் 100 சிறிய பேருந்துகளை இயக்கவுள்ளோம்” என்றனர்.

SCROLL FOR NEXT