தமிழகம்

அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் பல ஆயிரம் கோடி லஞ்சப் பணம் பதுக்கல்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சேலத்தில் உள்ள தமிழக அமைச்சர் எடப்பாடி பழனிச் சாமியின் வீட்டில் பல ஆயிரம் கோடி லஞ்சப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

கடந்த 4 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் லஞ்சமும், ஊழலும் அதிகரித்துவிட்டது. பல அமைச்சகங்களில் லஞ்ச வேட்டை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழக அமைச்சர்களின் லஞ்சப் பணம் முழுவதும் சேலத்தில் உள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் செலவுகளுக்காக இங்கு பல ஆயிரம் கோடி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சேலம் பகுதி மக்கள் பரவலாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, வருமான வரித் துறை யும், தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டை சோதனையிட்டு உண் மையை வெளிக்கொண்டு வரவேண்டும்.

வேளாண் பொறியாளர் முத்துகுமாரசாமி தற் கொலை வழக்கில் பல ஆதா ரங்கள் வெளிவந்து கொண் டிருக்கின்றன. தமிழகம் முழு வதும் 119 ஓட்டுநர் பணியிடங் களுக்கு தலா ரூ.1.75 லட்சம் வசூலிக்க வேண்டும் என்றும், அத்தொகை ஜெய லலிதாவுக்கு போய்ச் சேர வேண்டும் என்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வற்புறுத்தி யதாக வேளாண்துறை தலை மைப் பொறியாளர் செந்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

எனவே, இந்த வழக்கில் ஜெயலலிதாவிடமும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த வேண்டும். இந்த ஊழல் குறித்து சிபிஐ மூலம் பாரபட்சமற்ற விசாரணை நடத்தும்வரை காங்கிரஸ் கட்சி போராடும்.

ஆந்திர வனத்துறையும், காவல் துறையும் திட்டமிட்டு தமிழகத் தொழிலாளர்கள் 20 பேரை சுட்டுக் கொன்றுள்ளனர். தற்காப்புக்காக நடத்தப்பட்ட தாக்குதல் என ஆந்திர போலீஸார் கூறுவதை யாராலும் ஏற்க முடியாது. இதுகுறித்து முழு உண்மைகளையும் வெளிக்கொண்டுவர இரு மாநில அதிகாரிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். பலியானோர் குடும்பங்களுக்கு தமிழக, ஆந்திர அரசுகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

இது தொடர்பாக அமைச் சர் தரப்பின் கருத்தை அறிய பலமுறை முயற்சித்தும் தொடர்பு கொள்ள இயல வில்லை.

SCROLL FOR NEXT