தமிழகம்

தேனியில் சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்

செய்திப்பிரிவு

தேனியில் சிறுமியின் திருமணம் சைல்டு லைன் அமைப்பால் தடுத்து நிறுத்தப்பட்டது.

பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்த நாகராஜனின் 17 வயது மகளுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சரவணக்குமார் (38) என்பவருக்கும் மே 1-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இதுகுறித்து தேனி சைல்டுலைன் அமைப்புக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் தன்ராஜ் மற்றும் உறுப்பினர்கள் சென்று இருதரப்பு பெற்றோரையும் சந்தித்தனர்.

சிறுமிக்கு 18 வயது பூர்த்தி அடைந்த பிறகே திருமணம் செய்வோம் என எழுதி வாங்கி எச்சரித்தனர்.

SCROLL FOR NEXT