தமிழகம்

மத்திய பல்கலைக்கழக கட்டுமான விபத்து: 4 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

செய்திப்பிரிவு

திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக்கழக கட்டுமானம் இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந் தனர். இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரின் ஜாமீன் மனுக்களை திருவாரூர் நீதி மன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

திருவாரூர் மத்திய பல்கலைக் கழக குடியிருப்பு வளாகத்தில் ரூ.20 கோடியில் கட்டப்பட்டு வந்த விருந்தினர் மாளிகையின் முகப்பில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான போர்டிகோ மார்ச் 29-ல் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 16 பேர் காய மடைந்தனர்.

நன்னிலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சைட் இன்ஜினீயர் கள் ஆனந்த், அந்தோணி அமல் பிரபு, ஒப்பந்ததாரர் சதீஷ்குமார், மேற்பார்வையாளர் அய்யனார் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி திருவாரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியுள்ள தால், அவர்களை போலீஸ் காவலுக்கு அனுமதிக்க வேண்டும் என ஏற்கெனவே நன்னிலம் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் நன்னிலம் போலீஸார், மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதை சுட்டிக் காட்டிய திருவாரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜாகிர் உசேன், வழக்கில் தொடர்புடைய 4 பேருக்கும் ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி அவர்களுடைய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT