ஒட்டகங்களை ஓரிடத்திலிருந்து இன் னொரு இடத்துக்கு இடப்பெயர்ச்சி செய்வதற்கும் உணவுக்காக கொல் வதற்கும் தடைவிதித்து ராஜஸ்தான் மாநில பாஜக அரசு நிறைவேற்றியுள்ள சட்ட மசோதாவை முஸ்லிம்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
1992-ம் ஆண்டு இந்தியாவில் 7.5 லட்சமாக இருந்த ஒட்டகங்கள் எண்ணிக்கை 2012-ல் 3.30 லட்சமாக குறைந்துவிட்டது. நாட்டிலுள்ள ஒட்டகங்கள் எண்ணிக்கையில் பெரும் பகுதி ராஜஸ்தானில் இருப்பதால் அழிந்துவரும் ஒட்டக இனத்தைப் பாதுகாப்பதற்காக அதை மாநில விலங்காக கடந்த ஜூலையில் அறிவித் தது ராஜஸ்தான் மாநில அரசு.
இதன் அடுத்த கட்டமாக, ஒட்ட கங்களை உணவுக்காக கொல்வதற் கும் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு இடப்பெயர்ச்சி செய் வதற்கும் தடை விதித்து கடந்த 27-ம் தேதி சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றி இருக்கிறது. இதை மீறுவோருக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.20,000 வரை அபராதமும் விதிக்கப் படும் எனவும் அறிவித்துள்ளது.
பக்ரீத் பண்டிகைக்கு குர்பானி கொடுப்பதற்காக ராஜஸ்தானிலி ருந்து தமிழகம் வரை ஒட்டகங்களை வாங்கி வருவது வழக்கம். இந்நிலை யில் ராஜஸ்தான் அரசின் புதிய சட்ட மசோதாவை சில தமிழக முஸ்லிம் அமைப்புகள் எதிர்த்துள்ளன.
மாற்று வருமானத்துக்கு என்ன வழி?
ஒட்டகங்கள் வளர்ப்பை ஊக்கப்படுத்தி அவை கொடுக்கும் பாலையும் பால் பொருட்களையும் உணவுப் பொருளாக பயன்படுத்தலாம். இதன் மூலம் ஒட்டகம் வளர்ப்போரின் மாற்று வருமானத்துக்கு வழி கிடைக்கும்.
“பசு மற்றும் எருமைப் பாலைவிட சிறந்தது ஒட்டக பால். காசநோய், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றை குணப்படுத்தும் ஆற்றல் ஒட்டக பாலுக்கு உண்டு என்பதை நாங்கள் நிரூபித்திருக்கிறோம். ஆனால், இந்திய உணவு மற்றும் தரக்கட்டுப்பாடு நிறுவனம் ஒட்டக பாலை இன்னும் மக்களுக்கான உணவுப் பொருளாக அங்கீகரிக்கவில்லை. அதே சமயம், அமெரிக்காவில் ஒட்டகங்கள் இல்லை என்றபோதும் அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஒட்டக பாலையும் பால் பொருட்களையும் உணவுப் பொருளாக அங்கீகரித்திருக்கிறது” என்கிறார் தேசிய ஒட்டக ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் என்.வி.பாட்டீல்.